டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் சர்வதேச யோகா தின கருத்தரங்கம்

கருத்தரங்கத்திற்கு கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமை தாங்கி பேசினார். பேராசிரியர் லிங்கத்துரை யோகாசனம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் சர்வதேச யோகா தின கருத்தரங்கம்
Published on

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் சர்வதேச யோகா தினத்தையொட்டி யோகாசன விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

கல்லூரி நாட்டுநலப்பணித்திட்டம், இளையோர் செஞ்சிலுவை சங்கம் இணைந்து நடத்திய இந்த கருத்தரங்கத்திற்கு கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமை தாங்கி பேசினார். ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி விலங்கியல் ஆய்வுத்துறை பேராசிரியர் லிங்கத்துரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு யோகாசனம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். முன்னதாக நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேராசிரியர் பப்பி வின்சென்ட் வரவேற்று பேசினார். தமிழ் பேராசிரியர் கதிரேசன் அறிமுக உரையாற்றினார். முடிவில் பேராசிரியர் ஸ்ரீஜா நன்றி கூறினார். இதில் மாணவர்கள் கலந்து கொண்டு யோகாசன செய்முறை பயிற்சி எடுத்துக் கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com