பென்னாகரத்தில் சர்வதேச மகளிர் தின விழா

பெண்களுக்கு அவர்களின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கொண்டாடப்படுகிறது.நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
பென்னாகரத்தில் சர்வதேச மகளிர் தின விழா
Published on

பென்னாகரம்,

ஒவ்வொரு வருடமும் மார்ச் 8-ம் தேதியன்று, "சர்வதேச மகளிர் தினம்" உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையே சமத்துவத்தை ஏற்படுத்தவும், பெண்களுக்கு அவர்களின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கொண்டாடப்படுகிறது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மேலும் ஒன்றிய குழு துணை தலைவர் அற்புதம் அன்பு, ஒன்றிய கவுன்சிலர்கள்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன் (வட்டார வளர்ச்சி), வடிவேலன் (கிராம ஊராட்சி ), துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தாரா, சமூக நலத்துறை அலுவலர்கள் மைத்லின் மேரி, இந்திராணி மற்றும் வர்ஷினி, குணசுந்தரி , சுகன்யா, பிருந்தா மணி உள்ளிட்ட அலுவலக பணியாளர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

சர்வதேச மகளிர் தின விழா நிகழ்ச்சியை முன்னிட்டு அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com