ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சரிவு

16 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் குறைந்து வந்தது.நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து  சரிவு
Published on

பென்னாகரம்,

கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது.

இதனால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரிநீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விட ப்பட்டது. மேலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்துள்ளது.

இதனால் நேற்று ஒகேன க்கல்லுக்கு வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் வந்தது.

இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்து ள்ளது.

இதனால் இன்றுகாலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் குறைந்து வந்தது.

மெயின்அருவி, சினிபால்ஸ், ஐவர்பாணி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டு லுவில் மத்திய நீர்வளத்து றையினர் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com