கயத்தாறில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பவள விழா

பவள விழாவினை முன்னிட்டு கயத்தாறு புதிய பஸ் நிலையத்தில் கட்சிக்கொடி ஏற்றப்பட்டது.மாவட்ட துணை தலைவர் மைதீன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
விழாவில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
விழாவில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
Published on

கயத்தாறு:

கயத்தாறில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 75-வது ஆண்டு பவள விழாவினை முன்னிட்டு கயத்தாறு புதிய பஸ் நிலையத்தில் மாநில பொது செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அபூபக்கர் கட்சிக்கொடியினை ஏற்றினார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட துணை தலைவர் மைதீன் தலைமை தாங்கினார்.

மாவட்ட தலைவர் மீராசா மரைக்காயர், செயலாளர் மஹ்முதுல் ஹசன், பொருளாளர் மீராசா, துணை தலைவர்கள் நவுரங் சஹாப்தீன், இப்ராஹிம், துணை செயலாளர் முகம்மது உவைஸ், மாவட்ட பிரதிநிதி அரபி, ஒன்றிய தலைவர் கபூர், நகர தலைவர் செய்யது அலி, செயலாளர் தாஜ்தீன், பொருளாளர் கோஸ் முகமது, ஒன்றிய செயலாளர் காசிம், பொருளாளர் பக்ருதீன், ஒன்றிய துணை தலைவர் ஜாகீர் உசேன், நகர துணை தலைவர் மைதீன் பிச்சை, முகமது நாஜிப், முகமது நாசர், கமால்பீர், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை அமைப்பாளர் ராஜதுரை, கயத்தாறு தி.மு.க. நகர செயலாளர் சுரேஷ் கண்ணன், பேரூராட்சி கவுன்சிலர் நயினார் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கயத்தாறு பேரூராட்சி உறுப்பினர் செய்யது அலி பாத்திமா செய்திருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com