பட்டுக்கூடுகள் விலை அதிகரிப்பு

பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.ரூ.9 லட்சத்து 37 ஆயிரத்து 362-க்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.
பட்டுக்கூடுகள் விலை அதிகரிப்பு
Published on

தருமபுரி,

தருமபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூ டுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் 2,971 கிலோவாக இருந்த பட்டுக்கூடுகள் வரத்து நேற்று 2,113 கிலோவாக குறைந்தது. நேற்று முன்தினம் ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ.515-க்கு விற்பனையான பட்டுக்கூடு நேற்று கிலோவிற்கு ரூ.48 அதிகரித்தது.

ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.563-க்கும், குறைந்தபட்சமாக ரூ.252-க்கும், சராசரியாக ரூ.443.44-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.9 லட்சத்து 37 ஆயிரத்து 362-க்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com