கம்பைநல்லூர் ஸ்ரீராம் பள்ளியில் சாரண இயக்க தொடக்கவிழா

சாந்தி வேடியப்பன் ஆகியோர் தலைமை தாங்கினர்.நிகழ்சியின் நினைவாக மரக்கன்றுகள் நடப்பட்டன
கம்பைநல்லூர் ஸ்ரீராம் பள்ளியில் சாரண இயக்க தொடக்கவிழா
Published on

மொரப்பூர்,

கம்பைநல்லூர் ஸ்ரீராம் பள்ளியில் சாரண இயக்கத் தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளியின் தாளாளர் வேடியப்பன் மற்றும் சாந்தி வேடியப்பன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

பள்ளியின் இயக்குநர் தமிழ்மணி மற்றம் பவானி தமிழ்மணி முன்னிலை வகித்தனர்.

இவ்விழாவினை முதல்வர் சாரதி மகாலிங்கம் மற்றும் மாவட்ட சாரண பயிற்சி தலைவர் பாலசுந்தரம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இவ்விழாவில் தருமபுரி மற்றும் அரூர் சாரண உறுப்பினர்கள், கணேசன், சுந்தரராஜன், ஆறுமுகம், கலையரசன் மற்றும் மலர்கொடி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

மேலும் இவ்விழாவினை பள்ளியின் ஒருங்கிணைப் பாளர் குருமூர்த்தி, பள்ளியின் சாரண ஆசிரியர் சுதாகர் மற்றும் ஆசிரியர்கள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர். இவ்விழாவில் சாரண இயக்க பயிற்சியாளர்கள் மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகளை வழங்கினர். நிகழ்சியின் நினைவாக மரக்கன்றுகள் நடப்பட்டன

X

Maalai Malar
www.maalaimalar.com