தொம்பரகாம்பட்டியில் கண்ணாடி பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

லாரி ஓட்டுனரின் கவனகுறைவால் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தினால் தருமபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தொம்பரகாம்பட்டியில்  கண்ணாடி பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து
Published on

தொப்பூர்,

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த தொம்பரகாம்பட்டியில் பெருந்துறைக்கு கண்ணாடி லோடு ஏற்றி கொண்டு லாரி நேற்றிரவு வந்து கொண்டிருந்தது.

இந்த லாரி ஓட்டுனரின் கவனகுறைவால் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதனால் லாரியில் இருந்த கண்ணாடிகள் சாலையில் விழுந்து நொறுங்கின. இந்த விபத்தில் திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் கிராமத்தைச் ேசர்ந்த பிச்சை ஆண்டி (வயது47) என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

உடனடியாக அவர் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்தினால் தருமபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com