

வெள்ளக்கோவில்:
வெள்ளக்கோவில், உத்தமபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு கணினி பட்டா திருத்த சிறப்பு முகாம் நாளை 24-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
வெள்ளக்கோவில் நில வருவாய் ஆய்வாளர்குடியிருப்புக் கட்டிடத்தில் காலை 10 மணி முதல் 5 வரை நடைபெறும் இந்த முகாமில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள், வருவாய்த் துறையினர் கலந்து கொள்கின்றனர்.
இதில் பட்டா திருத்தம், இதர கோரிக்கைகள் குறித்து மனு அளித்து பயன்பெறலாம்.
நில அளவை எண், உட்பிரிவு தவறு, பரப்பளவு, உறவு நிலை, பெயர்எழுத்துப்பிழை, அ - பதிவேடு வெற்றாக இருத்தல் போன்ற கோரிக்கைகளுக்கு தகுந்த சான்றுகளை கொண்டு வந்து திருத்திக் கொள்ளலாம் என வருவாய்த்துறை அறிவித்துள்ளது.