அரசூரில் இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி

அரசூரில் இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.அப்பு என்கிற அய்யனார் (25) என்பவர் சித்ராவை கட்டிபிடித்து தவறாக நடக்க முயன்றுள்ளார்.
அரசூரில்  இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி
Published on

விழுப்புரம்:

திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள அரசூர் ரோடு தெருவைச் ேசர்ந்தவர் முருகன் மகள் சித்ரா (வயது 17) இவரது தாய் ராமாயி. இவர் தாய் அரசூரில் மீன் கடை வைத்து வியாபாரம் செய்கின்றார். சித்ரா அவரது அம்மாவுடன் சேர்ந்து வியாபாரம் செய்து வருகின்றார். இந்நிலையில் நேற்று மாலை கடையில் இருக்கும்போது பண்ருட்டி திருவதிகை கிராமத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் அப்பு என்கிற அய்யனார் (25) என்பவர் சித்ராவை கட்டிபிடித்து தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சிய டைந்த சித்ரா கூச்சல் போட்டார். உடனே அங்கிருந்த பொதுமக்கள் அய்யனாரை பிடித்து தர்ம அடி கொடுத்து அரசூர் போலீஸ் நிலையத்தில் ஒப்ப டைத்தனர். தகவலறிந்து வந்த திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் அப்புவை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அய்யனார் சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவத்தால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com