வெள்ளம் பாதித்த பகுதியில் பேரிடர் மீட்பு குழு ஆய்வு

காவிரியில் ஏற்பட்டதால் குமாரபாளையத்தில் 150 வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. தேசிய பேரிடர் மீட்பு படையினர் 22 பேர் குமாரபாளையம் வந்தனர்.
வெள்ளம் பாதித்த பகுதியில் பேரிடர் மீட்பு குழு ஆய்வு
Published on

குமாரபாளையம்:

காவிரியில் ஏற்பட்டதால் குமாரபாளையத்தில் 150 வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. தொடர்ந்து அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் வெள்ள பாதிப்பில் இருந்து பாதுகாக்க தேசிய பேரிடர் மீட்பு படையினர் 22 பேர் குமாரபாளையம் வந்தனர்.

மணிமேகலை தெரு, கலைமகள் தெரு, அண்ணா நகர், இந்திரா நகர் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகளை ஆய்வு செய்த திருச்செங்கோடு வருவாய் பிரிவு அதிகாரி இளவரசி, மீட்பு படையினரிடம் ஆலோசனை வழங்கினார்.

இவர்களுடன் வட்டாட்சியர் தமிழரசி, தி.மு.க. நகர செயலர் செல்வம், வருவாய் ஆய்வாளர் விஜய், கிராம நிர்வாக அலுவலர் முருகன், தியாகராஜன், செந்தில்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com