தஞ்சையில், மாணவர்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டி தொடக்கம்

மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் சங்கம் இணைந்து போட்டியை நடத்தியது.மேலும், அவர் மாணவர்களோடு ேடபிள் டென்னிஸ் விளையாடினார்.
போட்டியை ஆணையர் சரவணக்குமார் தொடங்கி வைத்து மாணவர்களுடன் விளையாடினார்.
போட்டியை ஆணையர் சரவணக்குமார் தொடங்கி வைத்து மாணவர்களுடன் விளையாடினார்.
Published on

 தஞ்சாவூர்:

தஞ்சையில் முன்னாள் மாணவர்கள் சங்கம் மற்றும் மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் சங்கம் ஆகியவை இணைந்து டேபிள் டென்னிஸ் விளையாட்டு போட்டியை நடத்தியது. நிகழ்ச்சியில் மாவட்ட டேபிள் டென்னிஸ் சங்க தலைவர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் ஹெர்பர்ட் ஜோன்ஸ் வரவேற்றார்.

புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஜெரோம் அடிகளார், மாவட்ட டேபிள் டென்னிஸ் சங்கம் செயலர் அண்ணாமலை, புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி தலைவர் கிளமெண்ட் அந்தோணிராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இந்த போட்டியை மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் தொடங்கி வைத்தார்.

மேலும் அவர் மாணவர்களோடு மேபிள் டென்னிஸ் விளையாடினார்.

இந்த நிகழ்ச்சியை எழுத்தாளர் தஞ்சை ராமதாசு தொகுத்து வழங்கினார். முடிவில் உடற்கல்வி இயக்குனர் பால்பிண்டோ நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com