தஞ்சையில், ஜவுளிக்கடையில் பணம் கொள்ளை

பணியாளர்கள் கடையின் உள்ளே டிராயரில் இருந்த பணம் காணாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.பணம் எவ்வளவு கொள்ளை போனது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
தஞ்சையில், ஜவுளிக்கடையில் பணம் கொள்ளை
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே தனியார் ஜவுளிக்கடை செயல்பட்டு வருகிறது.

நேற்று வியாபாரம் முடிந்து கடை பூட்டப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை பணிக்கு வந்த பணியாளர்கள் கடையின் உள்ளே டிராயரில் இருந்த பணத்தை காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து உடனடியாக கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரித்தனர்.

முதல்கட்ட விசாரணையில் கடையின் மேல் மாடி வழியாக மர்ம நபர்கள் குதித்து பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இருப்பினும் பணம் எவ்வளவு கொள்ளை போனது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

அதன் முடிவில் எவ்வளவு பணம் கொள்ளை போனது, வேறு ஏதாவது பொருள் கொள்ளை போனதா? என்பது தெரியவரும்.

மேலும் கடையில் பொருத்தப்பட்டு கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com