தஞ்சையில், வானவில் மன்ற கருத்தாளர்களுக்கான பயிற்சி

வானவில் மன்ற கருத்தாளர்கள் சுமார் 61 பேர் கலந்து கொண்டனர்.இயற்பியல் வேதியியல், உயிரியல் மற்றும் கணிதம் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டது.
கருத்தாளர்களுக்கான மண்டல அளவிலான பயிற்சி நடந்தது.
கருத்தாளர்களுக்கான மண்டல அளவிலான பயிற்சி நடந்தது.
Published on

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலக கூட்ட அரங்கில் வானவில் மன்ற கருத்தாளர்களுக்கான மண்டல அளவிலான ஒருநாள் பயிற்சி நடைபெற்றது.

இப்பயிற்சியில் தஞ்சாவூர்,திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த வானவில் மன்ற கருத்தாளர்கள் 61 பேர் கலந்து கொண்டனர். பயிற்சியை தஞ்சைமாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்க ல்வித்துறை உதவித்திட்ட இயக்குனர் ரமேஷ்குமார் தொடங்கி வைத்து சிறப்புரை யாற்றினார்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத்துணைத்தலைவர் பேராசிரியர் சுகுமாரன், மாவட்டச்செயலர் முருகன் வாழ்த்துரை வழங்கினர்.

மாநிலகருத்தாளர்கள் ராஜபாண்டி, சங்கரலிங்கம், அறிவரசன், பாரதிராஜா மற்றும்அருண்குமார் ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டு, இழுத்தல் மூலம் விசையின் செயல்பாடு, பலூன் செயல் முறை மூலம் அழுத்தம் தொடர்பான பயிற்சி, கூடைப்பந்து விளையாட்டு மூலம் குழந்தைகளின் கவனத்தை ஒருங்கிணைத்தல் மேலும் இயற்பியல் வேதியியல் உயிரியல் மற்றும் கணிதம் தொடர்பான பயிற்சிகள் வழங்கினர்.

பயிற்சியில் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, மாவட்டங்களை சார்ந்த ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை ஸ்டெம் ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் தஞ்சைமாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி த்துறை ஸ்டெம் ஒருங்கி ணைப்பாளர் சவுமியநா ராயணன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com