தஞ்சையில், வாலிபர் வெட்டி படுகொலை

ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பிரதீப் பலியானார்.முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை.
தஞ்சையில், வாலிபர் வெட்டி படுகொலை
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை கரந்தை குதிரைக்கட்டி தெருவை சேர்ந்தவர் பிரதீப் (வயது23). இவர் நேற்று இரவு வீட்டில் இருந்தார்.

அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் சிலர், பிரதீப் வீட்டில் இருந்து வெளியே வரவழைத்தனர்.

அப்போது மர்மநபர்கள் தாங்கள் மறைத்து வைத்து இருந்த அரிவாள் மற்றும் ஆயுதங்களால் திடீரென பிரதீப்பை சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பிரதீப் பலியானார்.

இருந்தாலும் ஆத்திரம் அடங்காத மர்மநபர்கள் தாங்கள் வைத்து இருந்த ஆயுதங்களால் அவருடைய முகத்தை சிதைத்தனர். இதனால் உருவமே தெரியாத அளவுக்கு அவரது முகம் சிதைந்துவிட்டது. பின்னர் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

இது குறித்த புகாரின் பேரில் தஞ்சை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரதீப்பை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தார்கள்? முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com