மாநில அளவில் குடும்ப நல அறுவை சிகிச்சையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் முதலிடம் - கலெக்டர் வாழ்த்து

மாநிலஅளவில் முன்றாம் இடம் பெற்றதற்காக டாக்டர் தேன்மொழிக்கும் கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்க ப்பட்டது.
கலெக்டர் ஷ்ரவன் குமாரிடம் டாக்டர் ராஜா மற்றும் தேன் மொழி ஆகியோர் கேடயம், பாராட்டு சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்து பெற்ற காட்சி.
கலெக்டர் ஷ்ரவன் குமாரிடம் டாக்டர் ராஜா மற்றும் தேன் மொழி ஆகியோர் கேடயம், பாராட்டு சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்து பெற்ற காட்சி.
Published on

கள்ளக்குறிச்சி:

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையின்படிமருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில், பல்வேறு குடும்ப நல அறுவை சிகிச்சைகள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், கள்ளக்குறிச்சி மாவட்ட த்தில் அதிக அளவு குடும்ப நல அறுவை சிகிச்சை கள் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துமனை களில்மேற்கொ ண்டத ற்காக இப்பணியினை பாராட்டி மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வு துறை அமைச்சர் கள்ளக்குறிச்சி மாவட்ட துணை இயக்குநர்( சுகாதாரப் பணிகள்) ராஜா வுக்கும், அதிக அளவில் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்த எலவனா சூர்கோட்டை வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் மாநிலஅளவில் முன்றாம் இடம் பெற்றதற்காக டாக்டர் தேன்மொழிக்கும் கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்க ப்பட்டது. இதையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், கள்ளக்குறிச்சி மாவட்டம் மாநில அளவில் குடும்ப நல அறுவை சிகிச்சை அதிக அளவில் மேற்கொண்டமைக்காக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் ,கள்ளக்குறிச்சி துணைஇயக்குநர் (சுகா தாரப் பணிகள்) ராஜா மற்றும் எலவனா சூர்கோ ட்டைவட்டார மருத்துவர் தேன்மொழி அகியோருக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இதனை மாவட்டகலெக்டர் ஷ்ரவன் குமாரிடம் காண்பித்து வாழ்த்துபெற்றனர். இந்நிகழ்வில், இணை இயக்குநர் ( சுகாதார பணிகள்) டாக்டர் ராமு மற்றும் அரசுஅலுவலர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com