சேலத்தில் கிரேன் எந்திரம் மீது அரசு பஸ் மோதி விபத்து டிரவைர், கண்டக்டர் உள்பட 10 பேர் காயம்

அரசுப் பேருந்து அந்த கிரேன் மீது பயங்கரமாக மோதியது.இதில் பஸ்சின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
விபத்தில் சிக்கிய பஸ் முன்பகுதி சேதம் அடைந்த காட்சி. விபத்தை ஏற்படுத்திய கிரேன்
விபத்தில் சிக்கிய பஸ் முன்பகுதி சேதம் அடைந்த காட்சி. விபத்தை ஏற்படுத்திய கிரேன்
Published on

சேலம்:

கோவையில் இருந்து சேலம் நோக்கி இன்று காலை ஒரு அரசுப் பேருந்து வந்தது. காலை 6.30 மணி அளவில் சேலம் 3 ரோடு ஜவகர் மில் எதிரில் வந்தபோது அங்கு ஒரு ஷெட்டில் நிறுத்தி இருந்த கண்டெய்னர் மற்றும் பேருந்துகள் விபத்தில் சிக்கியதால் அதை மீட்பதற்காக பயன்ப டுத்தப்படும் கிரேன் சாலையின் குறுக்கே வந்து திருவகவுண்டனூர் பைபாஸ் சாலையை நோக்கி திரும்பியது.

அப்போது எதிர்பாராத விதமாக அரசுப் பேருந்து அந்த கிரேன் மீது பயங்கர மாக மோதியது.இதில் பஸ்சின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.இந்த விபத்தில் பஸ்சின் முன் பகுதியில் அமர்ந்திருந்த கண்டக்டர் கோவிந்தராஜ் மற்றும் டிரைவர் ஜோதி வெங்கடேசன் (50 ) உள்பட 10-க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.இதுகுறித்து தகவலறிந்த பள்ளப்பட்டி போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கிய பேருந்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.மேலும் கிரேனை ஓட்டி வந்த சென்னையைச் சேர்ந்த டிரைவர் சந்தன ராஜ் (48 ) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.சாலையின் குறுக்கே கிரேன் வருவதை அறிந்த அரசு பேருந்து ஓட்டு நர் துரிதமாக செயல்பட்டு பஸ்சை நிறுத்தியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com