சேலம் டவுனில்தாய்-குழந்தை திடீர் மாயம்

சந்தியா (வயது 22). இவர் திருமணமாகி கணவரை பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்தார். சந்தியா குழந்தை நானிகாவுடன் கடைக்கு செல்வதாக கூறி சென்றனர். அதன்பிறகு அவர்கள் வீடு திரும்பவில்லை.
குழந்தை நானிகாவுடன் சந்தியா
குழந்தை நானிகாவுடன் சந்தியா
Published on

சேலம்:

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் சுப்பைய்யாபுரம் செல்லியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி ஜானகி. இவர்களது மகள் சந்தியா (வயது 22). இவர் திருமணமாகி கணவரை பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்தார். ஜானகியின் தாய் வீடு சேலம் கிச்சிபாளையம் சுந்தர் தெருவில் உள்ளது.

இந்த நிலையில் ஜானகியின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என வந்த தகவலையடுத்து ஜானகி மகள் சந்தியா மற்றும் பேத்தி நானிகாவுடன் சேலம் வந்தனர். அங்கு சந்தியா குழந்தை நானிகாவுடன் கடைக்கு செல்வதாக கூறி சென்றனர். அதன்பிறகு அவர்கள் வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கத்தில் தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. இதுபற்றி ஜானகி கிச்சிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தியா, அவரது குழந்தை நானிகா ஆகிய 2 பேரையும் தேடிவருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com