பென்னாகரத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.பென்னாகரத்தில் போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடந்தது.
பென்னாகரத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

பென்னாகரம்,

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் போக்குவரத்து கழக பணிமனை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் உதயகுமார் தலைமை தாங்கினார்.கிளை செயலாளர் தர்மராஜன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார், வெங்கடேசன், முருகன் ,வெங்கடாஜலபதி, மனோன்மணி ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் போக்கு வரத்து கழகங்களைப் பாதுகாக்க வேண்டும், பொதுப்போக்குவரத்தைப் பலப்படுத்த வேண்டும். தனியார் மய நடவடிக்கை களை முறியடிக்க வேண்டும், ஊதிய ஒப்பந்தத்தை இறுதிப்படுத்த வேண்டும், பேட்டா, இன்சென்டிவ் பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும், ஓய்வுபெற்ற ஊழியர்களின் ஓய்வுகால பலன், அகவிலைப்படி உயர்வு, மருத்துவக்காப்பீடு உடனடியாக வழங்கிட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் கிளை பொருளாளர் முருகன் நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com