தியாகதுருகத்தில் முதியவரிடம் வாக்குவாதம்; தட்டிக்கேட்ட இளைஞர் மீது தாக்குதல்3 பேர் கைது

அரசாங்கம் மகன் சுபாஷ் சந்திரபோஸ்தியாகதுருகத்தில் இருந்து குன்னியூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
தியாகதுருகத்தில்  முதியவரிடம் வாக்குவாதம்; தட்டிக்கேட்ட இளைஞர் மீது தாக்குதல்3 பேர் கைது
Published on

கள்ளக்குறிச்சி:

தியாகதுருகம் சந்தைமேடு பகுதியைச் சேர்ந்தவர் அரசாங்கம் மகன் சுபாஷ் சந்திரபோஸ் (வயது 22) இவர் சம்பவத்தன்று தியாகதுருகத்தில் இருந்து குன்னியூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது பேட்டை தெரு பகுதியில் சென்றபோது. இளைஞர்கள் சிலர் மோட்டார் சைக்கிள்கள் மோதியது சம்பந்தமாக முதியவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அங்கு சென்று ஏன் முதியவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறீர்கள் என சுபாஷ் சந்திரபோஸ் கேட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த பேட்டை தெரு பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் மகன் விஷ்ணு (20), சிவசண்முகம் மகன் விக்கி (19), சீனிவாசன் மகன் அருண்குமார் (26) ஆகி யோர் சுபாஷ் சந்திரபோஸை திட்டி, தாக்கினர். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விஷ்ணு, விக்கி, அருண்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்

X

Maalai Malar
www.maalaimalar.com