கும்பகோணத்தில், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.ஈட்டிய விடுப்பு சரண்டர் தொகை நிலுவையில் உள்ளதை உடனே வழங்க வேண்டும்.
கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
Published on

சுவாமிமலை:

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஈட்டிய விடுப்பு சரண்டர் தொகை நிறுவையில் உள்ளதை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட பொறுப்பாளர் நீலகண்டன் தலைமை தாங்கினார்.

மாவட்ட செயலாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார்.

இதில் கும்பகோணம் கோட்டத்திற்கு உட்பட்ட திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம் ஆகிய 3 வட்டங்களை சேர்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் மாவட்ட பொருளாளர் தியாகராஜன் நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com