ஓசூரில் இருசக்கர வாகனத்தில் தவறி விழுந்தவர் சாவு

இருசக்கர வாகனத்தில் இருந்து எதிர்பாராதவிதமாக அவர் தவறி விழுந்தார்.சிகிச்சை பலனின்றி நேற்றிரவு தாஸ் உயிரிழந்தார்.
ஓசூரில்  இருசக்கர வாகனத்தில் தவறி விழுந்தவர் சாவு
Published on

தருமபுரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்துள்ள நஞ்சுண்டேஸ்வரர் நகர் பகுதியை சேர்ந்தவர் தாஸ் (வயது64). ஓய்வு பெற்ற தாசில்தாரரான இவர் நேற்று இருசக்கர வாகனத்தில் அப்பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் இருந்து எதிர்பாராதவிதமாக அவர் தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு தாஸ் உயிரிழந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com