வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை

கார்த்திகை மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமான், பகவதி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.
பரமத்தி வேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவில் உள்ள முருகப்பெருமான், அனிச்சம் பாளையத்தில் வேல்வடிவில் உள்ள சுப்பிரமணியர், பிலிக்கல் பாளையம் அருகே கரட்டூரில் உள்ள விஜயகிரி பழனி ஆண்டவர் சிறப்பு அலங்காரத்தில்  அருள்பாலித்த காட்சி.
பரமத்தி வேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவில் உள்ள முருகப்பெருமான், அனிச்சம் பாளையத்தில் வேல்வடிவில் உள்ள சுப்பிரமணியர், பிலிக்கல் பாளையம் அருகே கரட்டூரில் உள்ள விஜயகிரி பழனி ஆண்டவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.
Published on

பரமத்திவேலூர்:

கார்த்திகை மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள முருகப்பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது .

இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமான், பகவதி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல் கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

மேலும் கபிலர்மலையில் உள்ள ‌பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியசாமி கோவில், பரமத்தியை அடுத்த பிராந்தகத்தில் 34.5 அடிஉயரத்தில் உள்ள ஆறுமுகக்கடவுள் கோவில்,பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோயிலில்‌ உள்ள சுப்ரமணியர்,பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை‌ முருகன் கோவில், அனிச்சம்பாளையத்தில் உள்ள வேல் வடிவம் கொண்ட சுப்ரமணியர், பிலிக்கல்பாளையம் ‌விஜயகிரி வடபழனி ஆண்டவர் கோவில், நன்செய்இடையார் திருவேலீஸ்வரர் கோயிலில் உள்ள ‌சுப்ரமணியர், காவேரி ஆற்றங்கரை அருகே உள்ள வள்ளி தெய்வானை சமேத பாலமுருகன் கோவில், ராஜா சாமி கோவில், சுள்ளிப்பாளையம் அருகே அருணகிரி மலையில் உள்ள முருகன் கோவில், அய்யம்பாளையம் ராஜாவாய்க்கால் அருகே உள்ள முருகன் கோவில் மற்றும் பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com