கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2-ஆக குறைந்தது

கடந்த சில நாட்களாகவே தினசரி பாதிப்பை விட குணமடை ந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 2 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2-ஆக குறைந்தது
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மாவட்ட நிர்வாக த்தின் பல்வேறு நட வடிக்கையால் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது.

கடந்த சில நாட்களாகவே தினசரி பாதிப்பை விட குணமடை ந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் கொரோ னா பாதிப்பு ஏற்படவில்லை.

மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதித்த வர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 893 ஆக உள்ளது.

அதே சமயம் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளார். இதுவரை மாவ ட்டத்தில் குணம் அடை ந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 155 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை கொரோனா தாக்கத்தால் மாவட்டத்தில் 736 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 2 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com