திண்டிவனத்தில் பேக்கரி கடையை உடைத்து துணிகர கொள்ளை

திண்டிவனத்தில் பேக்கரி கடையை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.கல்லாவில் இருந்த 75 ஆயிரம் பணம் சமோசா,உயர்தர கேக் வகைகள் ஆகியவை திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கொள்ளை நடந்த பேக்கரியில் போலீசார் விசாரணை நடத்திய காட்சி. 
கொள்ளை நடந்த பேக்கரியில் போலீசார் விசாரணை நடத்திய காட்சி. 
Published on

விழுப்புரம்:

திருப்பத்தூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்தவர் முருகன் (வயது44).இவர் திண்டிவனம் செஞ்சி ரோடு அருகே பாரதி வீதியில் சதீஷ் பேக்கரி நடத்தி வருகிறார். இவர் 3 நாட்களுக்கு முன்பு ஆடி கிருத்திகை முன்னிட்டு தனது சொந்த கிராமத்துக்கு சென்றுள்ளார். அந்த கடையை மேலாளர் முருகன்பார்த்து வருகிறார்.இவர் வழக்கம் போல கடையை இரவு 10 மணிக்கு பூட்டிவிட்டு சென்ற மீண்டும் காலையில் வந்து பார்க்கும்போது சொட்டர் பூட்டு உடைக்கப்பட்டு ஸ்வெட்டர் திறந்து இருந்ததை பார்த்து கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே வந்து பார்த்தபோது கல்லாவில் இருந்த 75 ஆயிரம் பணம் சமோசா,உயர்தர கேக் வகைகள் ஆகியவை திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து  மேலாளர் முருகன் திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இது குறித்து திண்டிவனம் ஏ.எஸ்பி. அபிஷேக் குப்தா நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.மேலும் கொள்ளையர்கள் அங்கிருந்து சமோசா, பப்ஸ்,பாதாம் கேக், போன்றவற்றை சாப்பிட்டுவிட்டு சாவகாசமாக சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com