வெவ்வேறு இடங்களில்விஷம் குடித்த 2 பேர் சாவு

குடும்பத் தகராறு காரணமாக இவருடைய மனைவி மற்றும் குழந்தையை பிரிந்து பிரிந்து குமரேசன் தனியாக வாழ்ந்து வந்தார்.மனம் உடைந்து காணப்பட்ட குமரேசன் விஷம் குடித்து தற்கொலை செய்தார்.
வெவ்வேறு இடங்களில்விஷம் குடித்த 2 பேர் சாவு
Published on

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள செஞ்சி நாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன் (வயது48). கூலி தொழிலாளி.

இந்த நிலையில் குடும்பத் தகராறு காரணமாக இவருடைய மனைவி மற்றும் குழந்தையை பிரிந்து பிரிந்து குமரேசன் தனியாக வாழ்ந்து வந்தார்.

இதனால் மனம் உடைந்து காணப்பட்ட குமரேசன் கடந்த 17ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.

இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் இவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஊத்தங்கரை அருகே உள்ள குள்ளவேடம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் உத்திரன் (வயது 46). இவருக்கு நீண்ட நாட்களாக குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் இவருக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

சம்பவத்தன்று மன விரக்தி அடைந்த உத்திரன் வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அக்கம் பக்கத்தினர் இவரை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி உத்திரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com