கோவையில்வீட்டின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை

வாலிபர் கைது செய்து சிறையில் அடைத்தனர். , பீரோவில் இருந்த ரூ.15 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரியவந்து.
கோவையில்வீட்டின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை
Published on

கோவை,

கோவை கே.ஜி.சாவடியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 53). விவசாயி. சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியுடன் தோட்டத்திற்கு சென்றார்.

பின்னர் மதியம் தங்கவேலு வின் மனைவி வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த ரூ.15 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரியவந்து.

பின்னர் இதுகுறித்து தங்கவேல் கே.ஜி.சாவடி போலீ சில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர்அவரது வீட்டுக்கு கைரேகை

நிபுணர்கள் வரவழை க்கப்பட்டு அங்குபதிவாகிருந்த கைரேகை களை பதிவு செய்தனர்.

மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி திருட்டில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வந்தனர். அப்போது கோவை நவக்கரை பகுதியில் தங்கி கூலி வேைல செய்து வரும் விழுப்புரத்தை சேர்ந்த அபுபக்கர் (வயது 22) என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அபுபக்கரை கைது செய்து அவரிடம் இருந்து பணத்தை மீட்டனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com