கோவையில் முதியவரிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டல்

நான் ரூ.13 லட்சத்து 75 ஆயிரம் வட்டியுடன் சேர்த்து ரூ.44 லட்சத்தை திருப்பி செலுத்தினேன்.நிதி நிறுவன உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
கோவையில் முதியவரிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டல்
Published on

பீளமேடு

கோவை சின்னியம்பா ளையம் ஜி.கே.ஆர் நகரை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 64).

இவர் பீளமேடு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் சொந்த தேவைக்காக கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த சிவகுமார் சந்திரன் (48), கே.கே.புதூரை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (50), திருப்பூரை சேர்ந்த ஜெயசந்திரன் ஆகியோர் நடத்தி வரும் நிதி நிறுவனத்தில் இருந்து ரூ.44 லட்சம் கடன் பெற்றேன்.

அதனை நான் ரூ.13 லட்சத்து 75 ஆயிரம் வட்டியுடன் சேர்த்து ரூ.44 லட்சத்தை திருப்பி செலுத்தினேன். ஆனால் அவர்கள் நான் வாங்கிய கடனுக்கு ரூ.61 லட்சம் வட்டி செலுத்துமாறு கேட்டனர்

அதற்கு நான் மறுத்தேன்.இதனால் அவர்கள் எனக்கு நோட்டீஸ் அனுப்பி விடுவதாக மிரட்டி வருகிறார்கள்.

எனவே கந்து வட்டி கேட்டு மிரட்டி வரும் அவர்கள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து பீளமேடு போலீசார் சிவகுமார் சந்திரன், ஹரிகிருஷ்ணன், ஜெயசந்திரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com