கோவையில் ஒரே நாளில் கார் உள்பட 3 இருசக்கர வாகனம் திருட்டு

மொபட்டை ரெயில் நிலையம் பின்புறம் நிறுத்திவிட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது மொபட் திருட்டு போயிருந்தது.இந்த சம்பவங்கள் குறித்து அந்தந்த பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில் ஒரே நாளில் கார் உள்பட 3 இருசக்கர வாகனம் திருட்டு
Published on

கோவை :

கோவை ஏ.கே.எஸ் நகரை சேர்ந்தவர் லட்சுமி கிளேரா (வயது 50).டிரைவர். இவர் தனது மொபட்டை ரெயில் நிலையம் பின்புறம் நிறுத்திவிட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது மொபட் திருட்டு போயிருந்தது. இது குறித்து உக்கடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

கோவை கூடுதல் கோர்ட்டில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வருபவர் ராஜ்குமார்(45). சம்பவத்தன்று இவர் கோர்ட் வளாகத்தில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை.

இது குறித்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணபதி ஆவாரம் பாளையத்தை சேர்ந்தவர் ஜவகர்(18). இவர் தனது மோட்டார் சைக்கிளை கொடிசியா அருகே நிறுத்திவிட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருட்டு போயிருந்தது. போத்தனூர் அருகே உள்ள குருச்சியை சேர்ந்தவர் மன்சூர்(35) இவர் தனது காரை நஞ்சுண ்டாபுரம் ரோட்டில் நிறுத்தி விட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது கார் திருட்டு போயி ருந்தது. இதுகுறித்து போலீசார் விசார ணை நடத்தி வரு கிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com