விழுப்புரம் அருகே குடிப்பழக்கத்தை நிறுத்த சொன்ன மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன்: 2 பேருக்கு வலைவீச்சு

வடிவேல் திவ்யாவை காதலித்து 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். வடிவேல் நாகராஜ் என்பவருடன் சேர்ந்து திவ்யாவின் கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது.
விழுப்புரம் அருகே குடிப்பழக்கத்தை நிறுத்த சொன்ன மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன்: 2 பேருக்கு வலைவீச்சு
Published on

விழுப்புரம்:

விழுப்புரம் சாலாமேட்டை சேர்ந்தவர் வேலன் என்கிற வடிவேல் (38). கட்டிட தொழிலாளி. இவர் விழுப்புரம் கே.கே. சாலை மணி நகரில் வசித்து வந்த திவ்யாவை காதலித்து 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதில் வடிவேலுக்கு குடிப்பழக்கம் உள்ளதாக தெரிகிறது. இப்பழக்கத்தை நிறுத்த சொல்லி வடிவேலுவை திவ்யா வலியுறுத்தியுள்ளார். இதனால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி வாக்குவாதமும், தகராறும் ஏற்பட்டு வந்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மாலை திவ்வாவை காண பக்கத்துவீட்டில் இருந்தவர்கள் சென்றனர். கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் வீட்டினுள் திவ்யா பிணமாக கிடந்தார். இது குறித்த தகவலின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். திவ்யாவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் திவ்யாவின் கணவர் வடிவேல், அவரது உறவினர் நாகராஜ் (30) என்பவருடன் சேர்ந்து திவ்யாவின் கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், திவ்யாவின் கணவர் வடிவேல், அவரது உறவினர் நாகராஜ் ஆகியோரை தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com