திண்டுக்கல்லில் கனமழைக்கு இடிந்த வீட்டுச்சுவர்

திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததால் வீட்டின் பக்கவாட்டுச்சுவர் இடிந்து வெளிப்புறமாக விழுந்தது. இதனால் அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்கள் உயிர்தப்பினர்.
கனமழையால் இடிந்து விழுந்த வீட்டுச்சுவர்.
கனமழையால் இடிந்து விழுந்த வீட்டுச்சுவர்.
Published on

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சிக்குட்பட்ட அனுமந்தன்நகர் புதுத்தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி மனைவி லில்லிசவுந்திரம்(56). கணவர் இறந்துவிட்டநிலையில் மகன் சுரேஷ்(38). அவரது மனைவி லூர்துமேரி, பேரன், பேத்தி மற்றொரு மகன் ஆல்வின் ஆல்பர்ட்(28) ஆகியோருடன் கூட்டுகுடும்பமாக வசித்து வருகிறார்.

இதில் ஆல்வின்ஆல்பர்ட் சற்று மனநலம் பாதிக்கப்பட்டதால் வீட்டிலேயே இருந்து வந்தார். கடந்த சில நாட்களாக திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது. நேற்றுஇரவு வீட்டில் அனைவரும் தூங்கிகொண்டிருந்தனர். அப்போது பக்கவாட்டுச்சுவர் இடிந்து வெளிப்புறமாக விழுந்தது.

இதனால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர்தப்பினர். சம்பவம் குறித்து அறிந்ததும் திண்டுக்கல் கிழக்கு வருவாய் ஆய்வாளர் அழகுமலை, பாலகிருஷ்ணாபுரம் வி.ஏ.ஓ அரவிந்த் ஆகியோர் வீட்டிற்கு சென்று ஆய்வு செய்தனர். சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நிவாரணத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தி.மு.க ஒன்றிய மீனவர் அணி அமைப்பாளர் பாலமுருகன், லில்லிசவுந்திரம் வீட்டிற்கு சென்று நிவாரணபொருட்கள் வழங்கி ஆறுதல் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com