உடன்குடியில் இந்து சமய பண்பாட்டு வகுப்புகள்

உடன்குடி ஓன்றியத்தில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கோடைகால இந்துசமய பண்பாட்டு வகுப்புகள் கடந்த 1 -ந் தேதி தொடங்கி 15 நாட்கள் நடைபெற்றது.இந்து ஓற்றுமை, பாரத நாட்டின் பழம் பெரும் கலாச்சாரம், இந்து சமயத்தின் அறிவியல் உண்மைகள் குறித்து திருச்சி தர்மபிரசார வீரராகவன் பேசினார்.
பரிசளிப்பு விழா  நடந்தபோது எடுத்த படம்
பரிசளிப்பு விழா நடந்தபோது எடுத்த படம்
Published on

உடன்குடி:

உடன்குடிதேரியூர் ஸ்ரீராமகிருஷ்ணா சிதம்பரேஸ்வரர் மேல்நிலைப்பள்ளியில் இந்துசமய பண்பாட்டு வகுப்புகளின் நிறைவு, மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது.

சேவாபாரதி அமைப்பின் சார்பில் உடன்குடி ஓன்றியத்தில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கோடைகால இந்துசமய பண்பாட்டு வகுப்புகள் கடந்த 1 -ந் தேதி தொடங்கி 15 நாட்கள் நடைபெற்றது.இதில் பங்கேற்ற சிறுவர், சிறுமிகள், பயிற்சியளித்த ஆசிரியர்கள் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் முன்னாள் மேலாளர் சாத்தாக்குட்டி தலைமை தாங்கினார். ஆசிரியர் பத்மநாபன், உடன்குடி ஓன்றிய பா.ஜ.க. மகளிரணி தலைவி தமிழ்செல்வி, ஓன்றிய பா.ஜ.க. தலைவர் அழகேசன், ஓன்றிய துணைத்தலைவி சாந்தி, மகராசி, சுயம்பு, மாயாண்டி, சுபாஷ்ராஜா, தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சேவாபாரதி மாவட்ட தலைவர் கிருஷ்ணமந்திரம் வரவேற்றார். இந்து ஓற்றுமை, பாரத நாட்டின் பழம் பெரும் கலாச்சாரம், இந்து சமயத்தின் அறிவியல் உண்மைகள் குறித்து திருச்சி தர்மபிரசார வீரராகவன் பேசினார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க. பொதுச்செயலர் ரா.சிவமுருகன் ஆதித்தன் பரிசுகளை வழங்கி பல்வேறு இந்து சுவாமிவேடங்கள் அணிந்து வந்த சிறுவர்களை பாராட்டினார்.நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் சுடலைமுத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிங்காரப்பாண்டி உட்பட திரளானோர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com