29-ந் தேதி நடக்கிறது: தேனி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்

மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளி சங்கங் களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29-ந் தேதி காலை நடக்கிறது.நேரிலோ அல்லது பாதுகாவலர் மூலமாகவோ விண்ணப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

தேனி:

தேனி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளி சங்கங்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29-ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடத்தப்படவுள்ளது.

இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சங்கங்கள் தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்து பயன் பெறலாம். மனு அளிக்க விரும்பும் மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல்,

குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், புகைப்படம்- 1 உடன் நேரிலோ அல்லது பாதுகாவலர் மூலமாகவோ விண்ணப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com