போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த போலீஸ் ஏட்டு நெஞ்சுவலி ஏற்பட்டு பலி

சேலம் அருகாமையில் உள்ள பனமரத்துப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஹரிதாஸ் பணியாற்றி வந்தார். ஹரிதாஸ் இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த போலீஸ் ஏட்டு நெஞ்சுவலி ஏற்பட்டு பலி
Published on

சேலம்:

சேலம் ஏற்காடு அடிவாரம் உள்ள கொண்டப்ப நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஹரிதாஸ் (வயது 59). போலீஸ்காரர். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் சேலம் அருகாமையில் உள்ள பனமரத்துப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஹரிதாஸ் பணியாற்றி வந்தார். நேற்று இரவு வழக்கம்போல் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது ஹரிதாசுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால் உறவினர்கள் அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சேர்த்தனர். அங்கு ஹரிதாசுக்கு அவசர வார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் ஹரிதாஸ் இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். இந்த சம்பவம் பனமரத்துப்பட்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் சக போலீசார் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உயிரிழந்த போலீஸ்காரர் ஹரிதாஸ் உடலுக்கு போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் போலீஸ் துறையில் பணியாற்றி வரும் அவரது நண்பர்கள், சக போலீசார் அஞ்சலி செலுத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com