பெண்ணிடம் பணம் கேட்டு தகராறு செய்த7 பேர் மீது வழக்கு

தாரமங்கலம் அருகில் உள்ள ஆரூர்பட்டி கிராமம் பைப்பூர் பகுதியில் பெண்ணிடம் பணம் கேட்டு தகராறு செய்த 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.பாலாஜி என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கார்த்தி, பிரதிப், லோகேஷ் ஆகியோருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
பெண்ணிடம் பணம் கேட்டு தகராறு செய்த7 பேர் மீது வழக்கு
Published on

தாரமங்கலம்:

தாரமங்கலம் அருகில் உள்ள ஆரூர்பட்டி கிராமம் பைப்பூர் பகுதியை சேர்ந்த வர் மாது என்கிற மகேஸ்வரி (வயது 40). இவருடைய மகன் பாலாஜி என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கார்த்தி, பிரதிப், லோகேஷ் ஆகியோருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக நேற்று முன்தினம் பாலாஜி வீட்டிற்கு சென்ற கார்த்தி மற்றும் நண்பர்கள் மகேஸ்வரியிடம் உன் மகன் எங்கு உள்ளார் என்று கேட்டு தகராறு செய்து மகேஸ்வரி,அவருடைய உறவினர்கள் சின்னத்தாய், மெய்யம்மாள் ஆகியோரை தாக்கி காயப்படுத்தியதாக தெரிகிறது.

இதுபற்றி மகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் கார்த்தி,பிரதிப், லோகேஷ்,பர மானந்தம், உதயகுமார்,மணி, வெற்றி,விஜயா, பூங்கோடி ஆகியோர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com