அன்னூரில் ரேஷன்கடை பெண் ஊழியருக்கு தொல்லை-வாலிபர் கைது

முருகசாமி மது குடித்து விட்டு வேலைக்கு வந்ததால் இளம்பெண் அவரை வேலைக்கு வேண்டாம் என்று கூறி விட்டார். முருகசாமி, தகாத வார்த்தைகள் பேசி, பாட்டு பாடி இளம்ெபண்ணை கிண்டல் செய்தார்.
அன்னூரில் ரேஷன்கடை பெண் ஊழியருக்கு தொல்லை-வாலிபர் கைது
Published on

அன்னூர்,

கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்த 35 வயது இளம்பெண். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு ரேஷன் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார்.

அப்போது அந்த கடையில் காந்திநகரை சேர்ந்த முருகசாமி (வயது 34) என்பவர் எடை போடும் வேலைக்கு சேர்ந்தார். அவர் மது குடித்து விட்டு வேலைக்கு வந்ததால் இளம்பெண் அவரை வேலைக்கு வேண்டாம் என்று கூறி விட்டார். இதனால் முருகசாமிக்கு இளம்பெண் மீது கோபம் ஏற்பட்டது.

தற்போது இளம்பெண் வேறு ஒரு ரேசன் கடையில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வேலைக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து சென்ற முருகசாமி, தகாத வார்த்தைகள் பேசி, பாட்டு பாடி கிண்டல் செய்தார்.

இது குறித்து இளம்பெண் அன்னூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரேசன் கடை விற்பனையாளரை பின் தொடர்ந்து சென்று கிண்டல் செய்த முருகசாமியை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

X

Maalai Malar
www.maalaimalar.com