

தருமபுரி,
தருமபுரி அரசு கல்லூரியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பி.எட்.தேர்வு நடந்தது.இந்த தேர்வை எழுத வந்தவர்களின் செல்போன்கள் உள்ளே கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு தேர்வு மையத்திற்கு வெளியே வைக்கப்பட்டிருந்தன.
அந்த செல்போனில் ஒன்றை திருடியதாக எழுத புகாரில் செட்டிக்கரை அருகேயுள்ள டீக்கடை குரும்பபட்டி பகுதியை சேர்ந்த லோகேஸ்வரன்(வயது 19) என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.அப்போது தான் ஒரே ஒரு செல்போனை மட்டுந்தான் திருடினேன் என்று அவர் கூறினார்.பின்னர் திருடப்பட்ட செல்போனை பறித்துக்கொண்டு லோகேஸ்வரனை விடுவித்தனர்.
இந்நிலையில் தேர்வுநடந்த அன்று கல்லூரியில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த பொது லோகேஸ்வரன் பலரது செல்போன்களை திருடி சென்ற காட்சி இருந்தது.இதனால் லோகேஸ்வரனை கைது செய்த போலீசார் அவரை கிளை சிறையில் அடைத்தனர்.