திண்டிவனத்தில் குட்கா வியாபாரி கைது

அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருளை விற்று வந்தனர்.20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
திண்டிவனத்தில் குட்கா வியாபாரி கைது
Published on

விழுப்புரம்: 

விழுப்புரம் மாவட்டம்திண்டிவனம் கிடங்கல் 2 அம்பேத்கார் தெருவை சேர்ந்தவர் சேர்ந்தவர் பகவான் (வயது 51). இவர் கிடங்கள் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருளை விற்று வருவதாக திண்டிவனம் ஏ.எஸ். பி. அபிஷேக் குப்தாவிற்கு ரகசிய தகவல் வந்தது. இதை தொடர்ந்து திண்டிவனம் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன் தலைமையிலான போலீசார் அவர் கடையில் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர் அதில் அவர் அரசால் தடை செய்யப்பட்ட 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் மாவட்டம் முழுவதும் குட்கா விற்பனை செய்வதாக கண்டறியப்பட்டு பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை செய்து வருகின்றனர் அதேபோல திண்டிவனத்தில் பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இவர் பல நாட்களாக குட்கா விற்பனை செய்வதும் தெரிய வந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com