கோவில்பட்டி புற்றுக்கோவிலில் குருபெயர்ச்சி விழா

கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன் புற்றுக்கோவிலில் குருபெயர்ச்சி விழா நடைபெற்றது. தொடர்ந்து தட்சிணாமூர்த்திக்கும், நவக்கிரகத்திலுள்ள குரு பகவானுக்கும் 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
புற்றுக்கோவிலில் குருபெயர்ச்சி விழா நடந்த காட்சி
புற்றுக்கோவிலில் குருபெயர்ச்சி விழா நடந்த காட்சி
Published on

கோவில்பட்டி:

கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன் புற்றுக்கோவிலில் குருபெயர்ச்சி விழா நடைபெற்றது. இதனையொட்டி நேற்று காலை 9 மணிக்கு கணபதி பூஜை, ஸ்தபன கும்பகலச பூஜை, யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து தட்சிணாமூர்த்திக்கும், நவக்கிரகத்திலுள்ள குரு பகவானுக்கும் 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.பூஜைகளை சுப்பிரமணியன் அய்யர் செய்தார். இவ்விழாவில் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com