குரூப்-4 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியீடு

போட்டித் தேர்வு கடந்த ஜூன் மாதம் 9-ந்தேதி நடைபெற்றது. எக்ஸ் சமூக வலைதளத்தில் டி.என்.பி.எஸ்.சி, அறிவித்துள்ளது.
குரூப்-4 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியீடு
Published on

சென்னை:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.), தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை குரூப்-1, குரூப்-2 மற்றும் குரூப்-4 ஆகிய போட்டித் தேர்வுகள் வாயிலாக நிரப்பி வருகிறது.

அந்த வகையில், கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ), இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், இளநிலை செயல் பணியாளர், ஆய்வக உதவியாளர், வரித்தண்டலர், வனக்காப்பாளர், நேர்முக உதவியாளர் உள்பட பல்வேறு பதவிகள் அடங்கிய குரூப்-4 பணிகளுக்கான போட்டித் தேர்வு கடந்த ஜூன் மாதம் 9-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்வை, தமிழகம் முழுவதும் 15 லட்சத்து 88 ஆயிரத்து 684 தேர்வர்கள் எழுதினர்.

இதற்கான தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று தேர்வர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

இந்த நிலையில், குரூப்-4 தேர்வுக்கான முடிவுகள் அடுத்த மாதம் (அக்டோபர்) வெளியாகும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. இதற்கான, அறிவிப்பை 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் டி.என்.பி.எஸ்.சி, வெளியிட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com