குறைதீர்க்கும் கூட்டம்: பொது மக்களிடம் பெறப்பட்ட 340 மனுக்கள் மீது நடவடிக்கை

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பலவேறு கோரிக்கைகள் அடங்கிய 340 மனுக்கள் பெறப்பட்டது.மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்க–ப்பட்டுள்ளது.
கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.
கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.
Published on

தஞ்சாவூர்:

தஞ்சாவூரில் நடைபெற்ற மக்கள் குறை தீரக்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி பேசியதாவது:-

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பலவேறு கோரிக்கைகள் அடங்கிய 340 மனுக்கள் பெறப்பட்டது.

இந்த மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்க–ப்பட்டுள்ளது.

மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ள–ப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் கருணை அடிப்படையில் சமையலராக ஒரு பயனாளிக்கு பணி நியமன ஆணையினையும், தமிழ் வளர்ச்சி துறை சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாளினை முன்னிட்டு மாவட்ட அளவில் நடைபெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா (வருவாய்), ஸ்ரீகாந்த் (வளர்ச்சி), தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப் திட்டம்) தவவளவன், நேர்முக உதவியாளர் சத்துணவு அன்பரசு மற்று அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com