தஞ்சையில், நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

தஞ்சாவூர் மின் பகிர்மான வட்டத்தில் குறைதீர்க்கும் நாள் நடைபெற்று வருகிறது. காலை 11 மணிக்கு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் நடத்தப்பட உள்ளது.
தஞ்சையில், நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
Published on

தஞ்சாவூர்:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செயற்பொறியாளர் கலைவேந்தன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தஞ்சாவூர் மின் பகிர்மான வட்டத்தில், மேற்பார்வை பொறியாளர் தலைமையில், ஒவ்வொரு மாதமும் முதல் வியாழக்கிழமை அன்று நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் நடைபெற்று வருகிறது.

அதன்படி நாளை ( வியாழக்கிழமை ) காலை 11 மணிக்கு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் தஞ்சாவூர் செயற்பொறியாளர் அலுவலகம், எண்.1 வல்லம ரோடு, தஞ்சாவூர் அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமையில் நடத்தப்பட உள்ளது.

ஆகவே வல்லம், மின்நகர், செங்கிப்பட்டி, வீரமரசன்பேட்டை, கள்ளப்பெரம்பூர், திருக்கானூர்பட்டி, வடக்கு தஞ்சாவூர், குருங்குளம், மருங்குளம், மெலட்டூர், புறநகர் திருவையாறு, நகர் திருவையாறு, புறநகர் திருக்காட்டுப்பள்ளி, நகர் திருக்காட்டுப்பள்ளி, நடுக்காவேரி பகுதி அலுவலகங்களைச் சார்ந்த மின்நுகர்வோர்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின், மேற்கண்ட குறைதீர் கூட்டத்தில் நேரில் வந்து தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com