கிராவல் மண் கடத்தும் கும்பல் அட்டூழியம்

கிராவல் மண் கடத்தி செல்லப்படுவதாக கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மண் அள்ளப்படும் இடத்தில் நிற்கும் பொக்லின் எந்திரம்.
மண் அள்ளப்படும் இடத்தில் நிற்கும் பொக்லின் எந்திரம்.
Published on

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் செல்லியம்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட வரகூர் பகுதியில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடங்கள் மற்றும் தனியாருக்கு சொந்தமான இடங்களில் வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை விடியற்காலை 3 மணியில் இருந்து காலை 7 மணி வரை செங்கல் சூளைகளுக்கு செம்மண் மற்றும் கிராவல் மண் கடத்தி செல்லப்படுவதாக கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

அதே போல் இன்று விடியற்காலை 3 மணியிலிருந்து காலை ஏழு மணி வரை ஒரு ஜே.சி.பி. எந்திரத்துடன் 4 டிராக்டர்களை பயன்படுத்தி வரகூர் சர்ச் அருகே உள்ள செங்கல் சூளைக்கு மண் கடத்தப்பட்டது.

இது குறித்து வரகூர் கிராம மக்கள் கூறும்போது வரகூரை சுற்றியுள்ள அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடங்கள் மற்றும் புள்ளாலப்பட்டி தனியார் நிலத்தில் செம்மண் மற்றும் திராவல் மண்ணை பல வருடங்களாக கடத்தி வருகின்றனர்.

இது சம்பந்தமாக பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சம்பந்தப்பட்ட செம்மண் கடத்தல் காரர்களிடம் ஊர் பொது மக்களாகிய நாங்கள் இந்த செயலை தட்டிக் கேட்டபோது எங்களை மிரட்டும் தோனியில் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

எனவே அரசு அனுமதி இன்றி அரசு புறம்போக்கு நிலத்திலும், தனியார் நிலங்களிலும் கனிம வளங்களை கடத்தும் நபர்கள் மீது மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com