பாட்டியை கொன்ற பேரன் கைது

ஆத்திரமடைந்த சூர்யா வீட்டில் இருந்த விளக்கை எடுத்து பெரம்பாயியை தாக்கினார். உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பாட்டியை கொன்ற பேரன் கைது
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை அருகே உள்ள அம்மாக்குளம் கீழத்தெருவை சேர்ந்தவர் சின்னையன். இவரது மனைவி பெரம்பாயி (வயது 78). இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் இவரது பேரன் சூர்யா (25) என்பவர் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது திடீரென இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த சூர்யா வீட்டில் இருந்த விளக்கை எடுத்து பெரம்பாயியை தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த பெரம்பாயி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெரம்பாயி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சூர்யாவை கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com