மயிலம் அருகே அரசு பஸ் கண்ணாடி உடைப்பு

சிறிது தூரம் சென்றவுடன் மாணவர்கள் படியில் தொங்கியபடி பயணம் செய்து வந்தனர்.ஆத்திரமடைந்து முன்பக்க படியின் பக்கவாட்டில் உள்ள கண்ணாடியின் மேல் பகுதியில் போடப்பட்டிருந்த தகரத்தை வேகமாக தட்டி உள்ளார்.
உடைக்கப்பட்ட பஸ் கண்ணாடியை படத்தில் காணலாம்.
உடைக்கப்பட்ட பஸ் கண்ணாடியை படத்தில் காணலாம்.
Published on

விழுப்புரம்:

திண்டிவனத்தில் இருந்து இன்று காலை அரசு பேருந்து கீழ் எடையாளம் கிராமத்திற்கு சென்றுள்ளது. அங்கிருந்து மீண்டும் பயணிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு திண்டிவனம் நோக்கி சென்று கொண்டிருந்தது. சிறிது தூரம் சென்றவுடன் மாணவர்கள் படியில் தொங்கியபடி பயணம் செய்து வந்தனர். அப்போது நடத்துனர் படியில் தொங்கி சென்ற மாணவர்களை பேருந்தின் மேலே ஏறி வரும்படி கூறினார்.

இதனால் முன்பக்க படியில் நின்று வந்த மாணவன், ஆத்திரமடைந்து முன்பக்க படியின் பக்கவாட்டில் உள்ள கண்ணாடியின் மேல் பகுதியில் போடப்பட்டிருந்த தகரத்தை வேகமாக தட்டி உள்ளார். இதில் கண்ணாடி உடைந்து பேருந்தின் உள்ளே சிதறியது. இதனால் பேருந்தின் உள்ளே பயணம் செய்த பயணிகள் அலறி அடித்து கீழே இறங்கினர். இதுகுறித்து தகவல் அறிந்த மயிலம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். பள்ளி மாணவன் பேருந்தின் கண்ணாடியை உடைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com