பென்னாகரம் அரசு கலை கல்லூரியில் பாலியல் வன்கொடுமை குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம்

பாலியல் வன்கொடுமைக்கு எதிரான சட்டங்கள் மற்றும் குற்றங்களுக்கான தண்டனைகளை தெரிவிக்கப்பட்டது.இவ்விழாவின் முடிவில் ஒருங்கிணைப்பாளர் கண்ணுச்சாமி நன்றி கூறினார்.
கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
Published on

பென்னாகரம்,

உலக சட்ட நீதி நாளை முன்னிட்டு பாலியல் வன்கொடுமைக்கு எதிரான சட்ட விழிப்புணர்வுக் கருத்தரங்கம் பென்னாகரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் செல்வவிநாயகம் தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தார்.

இதில் வக்கீல் தேவேந்திரன், பென்னாகரம் இலவச சட்ட உதவி மையம் சார்பில் சிவக்குமார் மற்றும் மகேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு பாலியல் வன்கொடுமைக்கு எதிரான சட்டங்கள் மற்றும் குற்றங்களுக்கான தண்டனைகளை மாணவர்களிடையே தெளிவாக எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இவ்விழாவின் முடிவில் ஒருங்கிணைப்பாளர் கண்ணுச்சாமி நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com