தந்தையை கொல்ல முயன்ற வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

வேல்சாமி,சூர்யா இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. சூர்யாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.
தந்தையை கொல்ல முயன்ற வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Published on

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி செந்தில் நகரை சேர்ந்தவர் வேல்சாமி (50). இவரது மகன் சூர்யா (20).

இவர்கள் இருவருக்கும் இடையில் குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. கடந்த 4-ந்தேதி தனது தந்தையான வேல்சாமியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்ய முயற்சித்த வழக்கில் சூர்யா கைது செய்யப்பட்டார்.

இதனிடையே சூர்யாவை குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கான அறிக்கையை ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் செந்தில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனிடம் சமர்ப்பித்தார்.

போலீஸ் சூப்பிரண்டு இதனை ஏற்று மாவட்ட கலெக்டரிடம் பரிந்துரை செய்தார்.இதன்படி சூர்யாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.இதனைத் தொடர்ந்து சூர்யா பாளை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com