சின்னசேலம் அருகே செல்போன் கடையில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு

செந்தமிழ் செல்வன் நைனார்பாளையம் பஸ் நிலையம் அருகே செல்போன் கடை நடத்தி வருகிறார். செல்போன்களை திருடிச் சென்ற மர்நபர்களை தேடி வருகின்றனர்.
திருடுப்போன செல்போன் கடை
திருடுப்போன செல்போன் கடை
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நயினார் பாளையம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் செந்தமிழ் செல்வன் (வயது 33). இவர் நைனார்பாளையம் பஸ் நிலையம் அருகே செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு 8 மணிக்கு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இன்று காலை கடையை திறந்த பார்த்த பொழுது கடையின் மேற்கூரை உடைத்து இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடையினுள் இருந்த 4 செல்போன்கள், பேட்டரிகள், ஹெட் போன், சார்ஜர் ஒயர் உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருள்கள் திருடு போனது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் மியோடிட் மனோ, தனிப்பிரிவு காவலர் சரவணன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். செல்போன்களை திருடிச் சென்ற மர்நபர்களை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com