திருக்கண்ணபுரம் சவுரிராஜபெருமாள் கோவிலில் தங்க கருட சேவை

108 திவ்யதேசங்களில் 17-வது தலமாக போற்றப்படுகிறதுஅடுத்த மாதம் (ஜூன்) 2-ந் தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சவுரிராஜ பெருமாள்.
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சவுரிராஜ பெருமாள்.
Published on

நாகப்பட்டினம்:

திருமருகல் ஒன்றியம் திருக்கண்ண புரத்தில் சவுரிராஜபெருமாள் கோவில் அமைந்துள்ளது.

இக்கோவில் வைணவ தலங்களில் திவ்ய தேசம் என்று அழைக்கப்படும் 108 திருத்தலங்களில் 17-வது தலமாக போற்றப்படுகிறது.

திருவரங்கம் மேலை வீடு எனவும், திருவேங்கடம் வடக்கு வீடு எனவும், திருமாலிருஞ்சோலை தெற்கு வீடு எனவும், திருக்கண்ணபுரம் கீழை வீடு எனவும் போற்றப்ப டுகிறது.

ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட பெருமையுடைய இந்த கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவ விழா நடைபெறுவதுவழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தங்க கருட சேவையும், சவுரிராஜ பெருமாள் ஓலை சப்பரத்தில் வீதி உலா நிகழ்ச்சியும் நேற்று முதல் நாள் இரவு நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவை யொட்டி, வருகிற 2-ம் தேதி திருக்கல்யாண உற்சவமும், 3-ம் தேரோட்டமும் நடைபெறுகிறது.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் தக்கார் முருகன், செயல் அலுவலர் குணசேகரன், கணக்கர் உமா மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com