அஞ்சலகங்களில் தங்க பத்திரம் விற்பனை தொடக்கம்

திண்டுக்கல் அஞ்சலகங்களில் தங்க பத்திரம் விற்பனை தொடங்கியது
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

திண்டுக்கல்:

இந்திய அஞ்சல் துறை சார்பில் தங்க சேமிப்பு பத்திரம் குறிப்பிட்ட கால இடைவெளியில் மாதம் தோறும் அனைத்து அஞ்சலகங்களிலும் விற்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று முதல் வருகிற 4ந் தேதி வரை தங்க பத்திரம் விற்பனை நடைபெறுகிறது.

24 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்க பத்திரத்தின் விலை ரூ.5109 ஆகும். 2.5 சதவீதம் வட்டி. ஒரு கிராம் முதல் 400 கிராம் வரை தங்க நகைகளை வைத்து பத்திரம் பெற்றுக் கொள்ளலாம். மேலும் 8 வருடங்களுக்கு பிறகு அன்றைய சந்தை மதிப்புக்கு ஏற்ப தொகை பெற்றுக் கொள்ளலாம் மத்திய அரசின் திட்டம் என்பதால் பணத்துக்கு முழு உத்தரவாதம்.

வாக்காளர்  அடையாள அட்டை, பான் கார்டு, ஆதார் எண் ஆகியவற்றை அடையாள சான்றாக கொண்டு வர வேண்டும். வங்கி கணக்கு எண் மற்றும் ஐ.எப்.எஸ்.சி. கோடு தேவை. வாரிசுதாரரின் நியமனத்துக்கு வயது, வங்கி கணக்கு எண், அடையாளச்சான்று ஆகியவையும் இருக்க வேண்டும் என திண்டுக்கல் முது நிலை அஞ்சலக கோட்டக்கண்காணிப்பாளர் சகாய ராஜ் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com