வீட்டில் அடைத்து வைத்து சிறுமி பாலியல் பலாத்காரம் - வாலிபர் கைது

ம்பெனியின் உரிமையாளர் சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.தங்கராஜ் ஆசை வார்த்தைகளை கூறி ஏமாற்றி கடத்தி சென்று வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார்.
கைது செய்யபடட் தங்கராஜ்
கைது செய்யபடட் தங்கராஜ்
Published on

திருப்பூர் :

திருப்பூர் அடுத்த குன்னத்தூர் வண்ணாம்பாறையில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் 17 வயது சிறுமி வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்ற சிறுமியை காணவில்லை. இதுகுறித்து கம்பெனியின் உரிமையாளர் சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது அதே பனியன் நிறுவனத்தில் வேலைபார்த்த நம்பியூரை சேர்ந்த தங்கராஜ் (24) என்பவர் சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் வீட்டில் அடைத்து வைத்து இருந்த சிறுமியை மீட்டனர். சிறுமியிடம் விசாரித்தபோது தங்கராஜ் ஆசை வார்த்தைகளை கூறி ஏமாற்றி கடத்தி சென்று வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார். இதையடுத்து போலீசார் கடத்தல் மற்றும் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து தங்கராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com